சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்பும் பெற இதை சாப்பிடுங்க!

Photo of author

By Kowsalya

உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும். உடல் திடமாக இருக்க பாட்டி காலத்தில் பயன்படுத்தக்கூடிய ரகசியங்களில் ஒன்று தான் இந்த உளுத்தங்கஞ்சி. ஓயாமல் வேலை செய்யும் விவசாயிகள் உழைப்பாளர்கள் அனைவரும் இதனை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

உளுத்தங்கஞ்சி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்:

1. உளுத்தம் பருப்பு ஒரு டம்ளர்- கருப்பு உளுந்து ஆக இருந்தால் மிகவும் நல்லது.

2. பச்சரிசி அரை டம்ளர்

3. வெந்தயம் ஒரு ஸ்பூன்

4. பூண்டு 20 பல்

5. வெல்லம் அல்லது கருப்பட்டி.

6. தேங்காய் மூடி -1.

செய்முறை:

1. முதலில் குக்கரை எடுத்து அதனுள் தண்ணீர் ஊற்றி இன்னொரு பாத்திரத்தை வைத்து அதனுள் உளுத்தம் பருப்பு, பச்சரிசி, வெந்தயம், பூண்டு போட்டு பருப்பு அளந்த டம்ளரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

2. இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும்.

3. தேங்காயை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தேங்காய் சாறு எடுத்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது குக்கரில் உள்ள பாத்திரத்தை எடுத்து நன்கு பருப்பை மசித்து அதில் தேங்காய் பால் மற்றும் வெல்லப்பாகை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

5. தேங்காயை துருவியும் விடலாம்.

6. சர்க்கரை உள்ளவர்களாக இருந்தால் தேங்காய் மற்றும் வெல்லத்தை தவிர்த்து விடுங்கள்.

7. செரிமான பிரச்சனை இருந்தால் தேங்காயைத் தவிர்த்து உண்ணுங்கள்.

8. அருமையான உளுத்தங்கஞ்சி ரெடி.