0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

0
225

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஊதக்காத்து பட்டு குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை வந்துவிடுகிறது. பலரும் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றாலும் அவர்களுக்கு உள்ள சளி சரியாகுவதில்லை. இந்த குரூப்பில் வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் போதும் எப்பேர்பட்ட சளியும் குணமாகிவிடும்.

ஒரு குழி கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு அந்த எண்ணெயில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். கை பொறுக்கும் அளவிற்கு சூட்டிங் பதம் வந்தவுடன் அந்த எண்ணையை குழந்தைகளின் நெஞ்சில் தடவ வேண்டும். குழந்தையின் முதல் பகுதியிலும் அந்த எண்ணையை போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். நெஞ்சு பகுதியில் மட்டுமே எண்ணெயை தடவ வேண்டும். வயிற்றுப் பகுதியில் தவறி கூட தடவக்கூடாது. ஏனென்றால் அது உஷ்ணத்தை ஏற்படுத்தி விடும். பின்பு குழந்தையின் மூக்கின் தண்டு மற்றும் காதுகளில் பின்புறத்திலும் தடவ வேண்டும். இவ்வாறு தடவுவதால் நீர் கோர்த்தல் ஏற்பட்டிருந்தால் கூட சரியாகிவிடும். குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு விட்டால் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவர். மருந்து விடுவதற்கு பதிலாக , சின்ன வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதனின் நடுப்பகுதியான குருத்து பகுதியை தனியாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வெங்காயம் குறுக்கை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் சூடு படுத்த வேண்டும். பின்பு சூடு ஆறியதும் , ஒரு துணியை எடுத்து அதனின் முனை பகுதியை சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த எண்ணையை தொட்டு குழந்தையின் மூக்கில் வைத்து எடுத்தாலே போதும் மூக்கடைப்பு சரியாகிவிடும்.

 

Previous article5 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் படர்தாமரை அரிப்பு படை காணாமல் போகும்! 
Next articleநூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!