ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

Photo of author

By Kowsalya

ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கும். ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வைரஸால் தலையில் நீர் கோர்த்து அந்த நீர் மூக்கின் வழியாக வருவதே சளி என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி சளி வருவதாலும் அந்த சளியை சிந்துவதாலும் தொண்டையிலும் மூக்கிலும் வலி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 13 மிளகை எடுத்து மென்று சாப்பிட 15 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இது சளி கட்டுக்குள் வருமே தவிர முழுமையாக குணமடையாது. தலையில் இருக்கும் நீரை எப்படி எடுப்பது என்பது தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் 2 ஸ்பூன்

2. சுண்ணாம்பு கால் டீஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.

2. அது இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

3. கால் டீஸ்பூன் அளவிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு சேர்க்கவும்.

4. சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

5. இந்த கலவையை மண்டையை சுற்றி நெற்றி மற்றும் மூக்கின் மீது தடவி விடவும்.

6. சுண்ணாம்பு பூசுவதால் புண்ணாகி விடும் என்று பயப்படவேண்டாம். மஞ்சள் சேர்ப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை.

7. இதனை பூசிக்கொண்டு ஒரு மணி நேரம் நன்கு படுத்து தூங்கி விடுங்கள்.

8. வேண்டுமென்றால் இரவில் பூசிக்கொண்டு படுத்துக் கொள்ளலாம்.

9. சுண்ணாம்பு மண்டையில் உள்ள நீரை முற்றிலுமாக உறிஞ்சிவிடும்.

10. அதனால் உங்களுக்கு சளி மற்றும் மூக்கடைப்பு பிரச்சனை உடனடி நிவாரணம் கிடைக்கும்..