3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்!

0
198

3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்!

மூன்று நாள் மட்டும் இதை தொடர்ந்து செய்தால் தலையில் உள்ள பொடுகு ஈறு பேன் ஆகியவை முற்றிலுமாக நீங்கிவிடும். ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். அதேபோல் பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று.

அதனால் நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் தலைகாணி உறை மற்றும் சீப்பு ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. வேப்பிலை ஒரு கைப்பிடி

2. செம்பருத்திப்பூ நான்கு

3. வெந்தயம் ஒரு ஸ்பூன்

4. இஞ்சி ஒரு துண்டு.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

3. அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து போட்டுக் கொள்ளவும். வேப்பம் பூ இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் நல்லது.

4. பின் அந்த தண்ணீரில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூவை போட்டுக் கொள்ளவும்.

5. ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.

7. இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

8. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நன்கு சூடு ஆற்றிக் கொள்ளவும்.

9. இதை பஞ்சில் நனைத்து வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.

10. அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவி விடவும்.

11. இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் உங்களது தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு ஆகியவை நிச்சயமாக நீங்கிவிடும்.

Previous articleநீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்!
Next articleதோல்வி பயத்தால் கதறும் எதிர்கட்சிகள்!