கை, கால் முட்டிகளில் கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும் ! இத பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

கை, கால் முட்டிகளில் கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும் !இத பண்ணுங்க!

ஒரு சிலருக்கு கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் கருப்பாக அசிங்கமாக இருக்கும். கவலையே படாதீங்க இரண்டே நாளில் உங்கள் கை முட்டி கால் முட்டி கருப்பு பகுதியை நீக்க இதோ இந்த வழியை பயன்படுத்துகங்கள்.

தேவையான பொருட்கள்

1.பால் காய்ச்சாதது.

2.சமையல் சோடா

3.எலுமிச்சை ஜூஸ்

தயாரிப்பு முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு முறையே உங்கள் வீட்டிலேயே செய்து உங்களது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

1. முதலில் ஒரு bowl -யை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் காய்ச்சாத பாலை 3 ஸ்பூன் அளவு ஊற்றவும்.

2. பிறகு அதில் அரை ஸ்பூன் அளவு சமையல் சோடாவை போடவும்.

3. பிறகு அதில் அரை ஸ்பூன் அளவு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும்.

அந்தக் கலவையை நன்றாக கலக்கி விட்டு உங்களது கை கால் முட்டிகளில் பூசி 15 நிமிடங்கள் தேய்க்கவும்.

இந்த முறையை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்யுங்கள் போதும். அதன்பின் உங்களது கை கால் முட்டியின் கருப்பு நிறம் நீங்குவதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்த எளிதான முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த எளிமையான காலகட்டத்தில் இதனை பயன்படுத்தி உங்களது கை கால்களை அழகாக மாற்றிக் கொள்ளுங்கள்.