சர்க்கரை நோய் தீர பாட்டி வைத்தியம்!

Photo of author

By Kowsalya

சர்க்கரை நோய் தீர ஈஸி டிப்ஸ்!

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய இயற்கை பாட்டி வைத்தியம் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இதனை சாப்பிடுவதற்கு முன்பாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு பாருங்கள் சர்க்கரையின் அளவு குறைந்து சாதாரண மனிதனை போல் நீங்களும் மாறிவிடுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

1. உப்பு இல்லாத சுண்டக்காய் வற்றல் -50கிராம்

2. கருஞ்சீரகம்- 50 கிராம்.

செய்முறை:

1. இதனை வறுக்கத் தேவையில்லை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள்.

2. அரைத்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது.

பயன்படுத்தும் முறை:

1. இதனை 5 கிராம் அளவு எடுத்து மாலை 6 மணி அளவில் பொடியை வாயில் போட்டு வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். அல்லது ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் அளவு பொடியை சேர்த்து கலக்கி குடிக்கலாம்.

2. சுவைக்காக உப்பு, சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்க தேவையில்லை அப்படியே குடிக்க வேண்டும்.

இதனை விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வந்து இப்பொழுது சர்க்கரை அளவை பரிசோதித்து பாருங்கள் நிச்சயமாக சர்க்கரை அளவு குறைந்திருக்கும்.

சர்க்கரை நோய்க்காக மருந்து, ஊசிகளை நீங்கள் எடுக்கும் பொழுது வருங்காலத்தில் அந்த மருந்துகள் உடலில் உள்ள உறுப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இயற்கை முறையை பயன்படுத்தி சர்க்கரை அளவை குறைத்து நலமுடன் வாழ இந்த மாதிரியான இயற்கை முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.