தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா? சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! படுத்த உடனே தூக்கம் வரும்!
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். ஆனால் வேலை பளு காரணமாக மற்றும் மன அழுத்தம் மற்றும் வேறு சில காரணங்களால் படுத்தவுடன் உறக்கம் வராது.
என்னதான் மனதை ஆற்றிக் கொள்ள நாம் ஈடுபட்டாலும் உறக்கம் என்பது இந்த மனநிலையில் ஒரு சிலருக்கு உடனடியாக வராது.
தூக்கமே வரவில்லை என்று மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதால் சீக்கிரமாக சிறுநீரகம் கெட்டு விடும் அபாயம் உள்ளது.
அதனால் மாத்திரைகளை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம் உடலை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
படுத்த உடனே உறக்கம் வர அருமையான வீட்டு வைத்தியம் ஒன்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
அதற்கு தேவையான பொருள் என்றால் அது சீரகம் மட்டுமே.
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை போட்டு அதில் கால் லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
3. சீரகம் நன்கு கொதித்து நிறம் மாறிய உடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
4. இதனை இரவு தூங்க செல்லும்முன் சாப்பிட்டு விட்டு அரைமணி நேரம் கழித்து மிதமான சூட்டில் பருகவும்.
5. சீரகத் தண்ணீரை குடித்த பிறகு ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும்.
6. இதை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது அற்புதமான மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
7. இது தூக்கத்தை வர வைப்பதோடு மட்டுமில்லாமல் இந்த தண்ணீரை சூடாக பருகும் பொழுது அஜீரண கோளாறுகள் வாயுத் தொந்தரவுகளையும் சரி செய்யும்.
தீர்வை நோக்கி வேறு எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து நமது ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.