உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

0
759

இந்த 3 பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். மூலம் உள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் பயம், எவ்வளவு கொடுமையானது என அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

இந்த முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் அனைத்து விதமான மூலம் 10 நாட்களில் குணமாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. துத்தி இலை

2. காய்ச்சிய பால்

3. பனங்கற்கண்டு

 

செய்முறை:

1. முதலில் துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள்.

2. அந்த இலையை நன்கு கழுவி கொள்ளவும்.

3. பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது இதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

5. நீங்கள் வேண்டுமென்றால் துத்தி இலையை வடிகட்டி வைத்துள்ள விழுதை மூலம் உள்ள புண்களின் மீது வைக்கலாம்.

6. வடிகட்டிய சாறோடு மிதமான சூட்டில் உள்ள பாலை அரை டம்ளர் ஊற்றவும்.

7. இதில் 2 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

8. இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வர மூல நோய் குணடையும்.

 

மூலம் வந்துவிட்டது என பயப்படாமல் அதற்கேற்றவாறு நம்மை நாம் மாற்றிக் கொண்டாலே நம் உடலில் பல மாற்றங்களை காணலாம்.

 

அனைத்திற்கும் நம் உணவு பழக்கங்களை காரணம். அதிகப்படியான நீர் அருந்துவது மூலம் வரவிடாமல் தடுக்கும் முதல் வழியாகும். வாரத்தில் இருமுறை முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவைகளை சாப்பிட்டு வரும்பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

 

Previous articleஉங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?
Next articleஇந்த ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்! இன்றைய ராசி பலன் 12-06-2021 Today Rasi Palan 12-06-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here