செயலிழந்த சிறுநீரகத்தையும் செயல்பட வைக்கும் அற்புதமான கஞ்சி!

Photo of author

By Kowsalya

செயலிழந்த சிறுநீரகத்தையும் செயல்பட வைக்கும் அற்புதமான கஞ்சி!

இன்று அதிகப் பேர் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது சிறுநீரக பிரச்சனை. சிறுநீரகத்தில் கல் இருக்கின்றது, சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறுநீரக குழாய் தொற்று என்று ஏகப்பட்ட நோய்கள் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் அல்லது சீறுநீரகக் பாதையில் ஏற்படும். இது வயிற்றின் மேல் பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் பயங்கரமான வலியை கொடுக்கும். இதற்கான உரிய சிகிச்சை நீங்கள் பெறாவிடில் சிறுநீரகம் செயல் இழக்கும் அபாயமும் உள்ளது.

இந்த பிரச்சனையை சரிசெய்ய அற்புதமான கஞ்சியை தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. நொய்யரிசி 100 கிராம்

2. சிறுநெருஞ்சி 5 கிராம்

3. மிளகு 5 கிராம்

4. பூண்டு ஒரு பல்

5. சீரகம் கால் டீஸ்பூன்

6. மஞ்சள்தூள் 2 சிட்டிகை.

செய்முறை:

1. முதலில் பாத்திரத்தை எடுத்து அதில் 100 கிராம் நொய்யரிசியை போட்டு நன்கு கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

2. ஒரு காட்டன் துணியில் சிறுநெருஞ்சில், மிளகு, பூண்டு, சீரகம் ஆகியவற்றை இடித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, அந்த துணியை கட்டி அரிசியுடன் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3. தண்ணீர் போதவில்லை என்றால் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரிசியை நன்கு வேக வைக்கவும். அரிசி குழைந்ததும் சிறுநெருஞ்சில் போட்ட துணி மூட்டையை எடுத்து விட்டு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

இந்த கஞ்சியை காலை மற்றும் மாலை இருவேளையும் சாப்பிட்டு வரும் பொழுது செயலிழந்த சிறுநீரகங்கள் கூட சீராக செயல்பட உதவுகின்றது. மேலும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கின்றது. மேலும் சிறுநீரக கற்களைக் கரைக்கிறது.