மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

Photo of author

By Kowsalya

சிலருக்கு மூலம் இருக்கும் ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குவார்கள். உள்மூலம் வெளிமூலம் என இரண்டு வகை உண்டு. அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும் அருமருந்து ஒன்று பார்க்கவிருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

1. ஓமம் 200 கிராம்

2. வாய்விளங்கம் 100 கிராம்

3. அதிமதுரம்100 கிராம்

4. இந்துப்பு 100 கிராம்

5. நிலாவரை கால் கிலோ

6. கடுக்காய் கால்கிலோ

7. ரோஜா பூக்கள் கால் கிலோ

8. தேன் அரை லிட்டர்.

9. நெய் கால் லிட்டர்.

செய்முறை:

1. முதலில் ஒவ்வொரு ஓமம், வாய் விளங்கம், அதிமதுரம், நிலாவரை, கடுக்காய், ரோஜா பூ, இந்துப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. பின் ஒரு பாத்திரத்தில் தேனை ஊற்றி கொதிக்க வைத்து பொடித்து வைத்துள்ள பொடியை இதனுடன் சேர்க்கவும்.

3. இதனை லேகியமாக நன்கு கிளறிக் கொள்ளவும். நெய் சேர்த்து நன்கு கிளறிய லேகியத்தை பத்திரப்படுத்தவும்.

4. இப்போது லேகியம் தயார்.

இந்த லேகியத்தை காலையிலும் 5 கிராம் அளவிற்கு வெறும் வாயில் சாப்பிட்டு வர வேண்டும்.

இதை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், வாயுக்கோளாறுகள், அதிக கொழுப்பு சேர்தல் அனைத்தும் குணமாகும்.