தொங்கும் தொப்பையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா? இதை பயன்படுத்துங்க! அனுபவ உண்மை!

Photo of author

By Kowsalya

அனைவருக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் உணவுப் பழக்கங்கள் காரணமாக தொப்பை ஏறி இருக்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் தொப்பை போட்டு இருக்கும். இது எல்லாம் ஒரே வாரத்தில் சரி செய்வது எப்படி. அதற்கான இயற்கை வழி முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் 2 ஸ்பூன்

2. மிளகு அரை ஸ்பூன்

3. சுக்குத் தூள் அரை ஸ்பூன்

4. பட்டைத் தூள் அரை ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

3. பின் அரைஸ்பூன் மிளகுத்தூளை சேர்த்து கொள்ளவும்.

4. பின் அதில் சுக்குப்பொடி எடுத்து கலந்து கொள்ளவும்.

5. பட்டை பொடி அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

6. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

7. இப்போது ஒரு கிளாசை எடுத்து அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு இந்தப் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

8. நன்றாகக் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

9. பத்து நிமிடம் அப்படியே விட்டு விடவும்.

இதனை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின் இரவு படுக்கப்போகும் முன் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்.

இப்படி ஒரு வாரம் விட்டு வாரம் இதனைக் குடித்து வரும்பொழுது மாதம் உங்களுக்கு மூன்று கிலோ வரையில் உடல் எடை குறையும். தொங்கும் தொப்பை காணாமல் போய்விடும். இதில் மஞ்சள் சேர்த்து இருப்பதால் உடலில் உள்ள நச்சு கழிவுகளை விரைவில் வெளியேற்றிவிடும்.