இரவில் படுத்த உடன் தூங்க வேண்டுமா? இதோ இதை மட்டும் சாப்பிடுங்கள்!

Photo of author

By Kowsalya

இன்றைக்கு அனைவருக்கும் தூக்கம் என்பது எட்டா கனியாக உள்ளது. ஒரு சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வந்து விடும். அது ஒரு வரம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவது கிடையாது. படுத்த உடனே தூக்கம் வரவேண்டுமா ? வாருங்கள் அதற்கான முறையை பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

1. கசகசா 1 ஸ்பூன்

2. ஏலக்காய் கால் ஸ்பூன்

3. பால் ஒரு டம்ளர்

செய்முறை:

1. முதலில் வாணலி சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் கசகசாவை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

2. அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.

3. ஒரு டம்ளரில் அரை ஸ்பூன் கசகசா பொடியை சேர்த்து கொள்ளவும்.

4. பின் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ளவும்.

5. அதில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றவும்.

6. சுவைக்காக தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை இரவு படுக்க செல்லும் முன் குடித்து வாருங்கள். 10 நிமிடத்தில் உறக்கம் வந்து விடும். தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர தூக்கம் வரும் நேரம் பழகி விடும்.

இன்னொரு முறை உள்ளது. பால் பிடிக்காது என்பவர்கள் , கசகசா பிடிக்காது என்று சொல்பவர்கள் ஒரு வாழை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். ஒரு பௌலில் சீரக பொடியை எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த வாழை பழத்தை சீரக பொடியில் தொட்டு சாப்பிட்டு வர உடனடியாக உறக்கம் வரும்.