காது அடைக்கும் குறட்டையை நிறுத்த இயற்கை மருந்து!

Photo of author

By Kowsalya

காது அடைக்கும் குறட்டையை நிறுத்த இயற்கை மருந்து!

Kowsalya

இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள்

2. ஏலக்காய்

3. தேன்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைக்கவும்.

3. அதில் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் பொடியை சேர்க்கவும்.

4. பின் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.

5. நன்கு கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

6. இதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை தினமும் இரவு படுக்க செல்லும் முன் 50 மில்லி அளவு பருகி வந்தால் குறட்டை சத்தத்தை குறைத்து சளிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நெஞ்சு சளியை குறைக்கும்.