தொண்டை வலிக்கு நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்!! ட்ரை பண்ணி பாருங்க!!

0
63
Home Remedies for Sore Throat!! Try it!!
Home Remedies for Sore Throat!! Try it!!

தற்பொழுது குளிர்காலம் நிலவி கொண்டிருக்கிறது.இந்த குளிர்காலத்தில் தொண்டை கரகரப்பு,தொண்டை வலி போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது.தொண்டை பகுதியில் அதிகளவு வலி ஏற்படுவதால் உணவு உட்கொள்வதில் சிரமம் உண்டாகிறது.தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பிற்கு பயனுள்ள 2 வீட்டு வைத்தியங்கள் இதோ.

வீட்டு வைத்தியம் 01:

தேவைப்படும் பொருட்கள்:

1)பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன்
2)மிளகு – பத்து

தயாரிக்கும் முறை:

முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து பத்து கரு மிளகை லேசாக தட்டி பொட்டுக்கடலையில் கலந்து வாயில் கொட்டி மென்று சாப்பிடுங்கள்.

கரு மிளகு காரம் நிறைந்த பொருள்.இதை வெறும் வாயில் மென்று சாப்பிட இயலாது என்ற காரணத்தினால் தான் பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிட சொல்லப்படுகிறது.

கருப்பு மிளகு தொண்டையில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமி தொற்றுகளை அழிக்க கூடிய ஆற்றல் கொண்ட மூலிகையாகும்.இந்த கரு மிளகை இடித்து இதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

கரு மிளகில் கஷாயம் செய்து பருகினால் இருமல்,தொண்டை வலிக்கு முழு நிவாரணம் கிடைக்கும்.

வீட்டு வைத்தியம் 02:

தேவைப்படும் பொருட்கள்:

1)துளசி இலை – பத்து
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)மிளகு – ஐந்து

தயாரிக்கும் முறை:

முதலில் பத்து துளசி இலையை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.பிறகு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி துளசி இலையை போட்டு கொதிக்க வைக்கவும்.

அதற்கு அடுத்து ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு தட்டி துளசி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் தொண்டை வலி,இருமல் குணமாகும்.

Previous articleசொத்தை பல் மீது இந்த பேஸ்டை பூசினால்.. புழுக்கள் துடி துடித்து இறந்துவிடும்!!
Next articleபொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!