திடீர் மூச்சு திணறல் பிரச்சனையை முழுமையாக போக்கும் வீட்டு வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

திடீர் மூச்சு திணறல் பிரச்சனையை முழுமையாக போக்கும் வீட்டு வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இன்று பெரும்பாலானோர் மூச்சு திணறல் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பிற்கு பின்னர் மூச்சு திணறல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.திடீர் பதட்டம்,பயம்,ஆஸ்துமா,ஒவ்வாமை,சளி உள்ளிட்ட காரணங்கள் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

சிலருக்கு குறுகிய காலத்தில் மூச்சு திணறல் ஏற்படலாம்.சிலருக்கு இந்த மூச்சு திணறல் பாதிப்பு நீண்ட வருடங்களுக்கு தொடரும்.

மூச்சு திணறல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

1)உடல் பருமன்

2)இதய நோய்

3)இரத்த சோகை

4)நுரையீரல் பிரச்சனை

5)ஆஸ்துமா

6)ஒவ்வாமை

7)சுவாச தொற்றுநொய்

மூச்சு திணறலை தவிர்க்க வழிகள்:

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மூச்சு திணறலை குணமாக்கும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)மஞ்சள்
3)தேயிலை தூள்
4)தண்ணீர்
5)பனங்கற்கண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி தட்டி அதில் சேர்க்கவும்.அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி தேயிலை தூள் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு சுவைக்காக பனங்கற்கண்டு சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இவ்வாறு தினமும் இந்த பானத்தை குடித்து வந்தால் மூச்சு திணறல் கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு இடித்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.

பிறகு இதை ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் மூச்சு திணறல் கட்டுப்படும்.