பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

Photo of author

By Kowsalya

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி!

தேவையான பொருட்கள்:

1. கிராம்பு பொடி 25 கிராம்

2. கடுக்காய் பொடி 40 கிராம்

3. அக்ரகாரம் பொடி 10 கிராம்

4. நாயுருவி வேர் பொடி 25 கிராம்

5. கல்லுப்பு பொடி 15 கிராம்

 

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கிராம்பு:

கிராம்பை பற்றி அனைவருக்கும் தெரியும் பற்களில் உள்ள கிருமிகளை அழிக்க பயன்படுகிறது.

கடுக்காய்:

அந்த காலத்தில் நம் பெரியவர்கள் கடுக்காயை வைத்துதான் பெரிய கட்டிடங்கள் கட்டினாராம். கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் எளிதில் உடையாதாம். எனவே கடுக்காயை கொண்டு பல் துலக்கி வர பற்கள் வலிமை பெறும்.

அக்ரகாரம்:

அக்கரகாரம் கொண்டு பல் துலக்க ஆடும் பற்க்களை கூட இறுக்கிப் பிடிக்கும் தன்மை பெற்றுவிடும் என்று சித்தர்கள் கூறுவார்கள். பல் வலியை சரி செய்யும். மேலும் நரம்புகளை வலுப்படுத்தும்.

நாயுருவி வேர்:

நாயுருவி கொண்ட பல் துலக்கி விட்டு உடனே ஒரு கல்லை கடித்தாலும் உடைந்து போகும் அளவிற்கு பற்க்கள் வலிமை பெறும். அந்த அளவுக்கு சக்தி தரக்கூடியது நாயுருவி.

உப்பு:

உப்பை பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தக் காலத்தில் உப்பை வைத்து தான் நம் முன்னோர்கள் பற்களை துலக்கினார்கள். உப்பு வாயில் உள்ள கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது.

 

மூலிகை பற்பொடி செய்முறை:

 

1. மேற்கூறிய 5 இல் உப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

2. மீதமுள்ள நான்கு பொடியையும் மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் எடுத்து கலந்து கொள்ளவும்.

3. காலையில் இந்த பொடியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் மூன்று நாட்கள் உங்களது பல் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.