ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

Photo of author

By Kowsalya

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளால் முகம் மற்றும் உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் வளரும். அதனை பியூட்டி பார்லர் சென்று நீக்கினாலும் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது ஒரே வாரத்தில் முகம் மற்றும் உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் வழிமுறையைக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

1. முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன்

2. கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன்.

3. அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:

1. ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும்.

2. அதில் முல்தானி 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு அரை ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

3. இந்த பேஸ்ட்டை நீங்கள் எங்கு தேவையற்ற முடிகள் இருக்கிறதோ அங்கு பூசி முடி வளர்ச்சியின் நேர்பக்கம் தடவி விடவும்.

4. அரை மணி நேரம் கழித்து காய்ந்த உடன் முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையில் தேய்த்து விடவும்.

5. அப்பொழுதே ஒரு சில முடிகள் உதிர்வது காணலாம்.

6. நீங்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்து வர முடிகள் தானாகவே உதிர்ந்துவிடும்.