மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற இதை செய்தால் போதும்!

Photo of author

By Kowsalya

எல்லோருக்குமே சிரிப்புதான் அழகு. சிரிக்கும்போது பற்கள் வெளியே தெரியும் பொழுது பற்கள் மஞ்சளாக இருந்தால் அதுவே அசிங்கமாக மாறிவிடும். மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்ற இதை செய்தால் போதும் அது என்னவென்று இந்த பதிவில் வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. உப்பு கால் டீஸ்பூன்

2. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்

3. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. கால் டீஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

3. கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

4. ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும்.

5. இதையடுத்து பற்களில் நன்கு தேய்த்து பல் துலக்கவும்.

6. 5 நிமிடம் நன்றாக பல் தேய்த்து விட்டு பிறகு நார்மலாக நீங்கள் எந்த பேஸ்ட் பயன்படுத்துகிறீர்களோ அதை கொண்டு பல் துலக்கவும்.

7. இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதும்.

மஞ்சள் பற்கள் இனி உங்களுக்கு வராது.