வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

0
158

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு முக்கியம திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம்.

இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் முதல்முறையாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தற்போதைய அரசு மருத்துவமனைகளில் ரத்த அழுத்தத்துக்கும், நீரழிவுக்கும் மருந்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 20 லட்சம் பேருக்கும் வீட்டிற்கே சென்று மருந்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. 20 லட்சம் பேரைத் தவிர அரசு மருத்துவமனைகளுக்கும் வராத மலைவாழ் மக்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிற மக்களும் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.

அதன்படி இத்திட்டத்திற்கு முன்னோட்டமாக சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் வீட்டிற்கே நேரடியாக சென்று மருந்துகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். மேலும், மற்றொரு பயனாளியின் வீட்டிற்கு சென்று அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சையை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார். 20 லட்சம் பேருக்கு கணக்கிட்டு இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்ட உள்ளதாகவும், விரைவில் ஒரு கோடி பேருக்கு என உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous article40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்
Next articleவிழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?