நக சுத்தியை ஒரே நாளில் குணப்படுத்தும் வீட்டுப்பொருட்கள்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

கை மற்றும் கால் நகங்களில் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் நகசுத்தி உருவாகும்.இதனால் விரல்கள் வீக்கமடைந்து அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.இந்த நகசுத்தியை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்கள் போதும்.

1)கற்றாழை
2)மஞ்சள்

கற்றாழை செடியில் இருந்து பிரஸ் ஜெல்லை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்கி நகசுத்தி மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)வைட்டமின் ஈ எண்ணெய்

வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நகசுத்தி உள்ள விரல்களை 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பிறகு விரலை துடைத்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை தடவினால் விரைவில் பலன் கிடைக்கும்.

1)உப்பு
2)வினிகர்

ஒரு பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதன் பிறகு நகசுத்தி பாதிக்கப்பட்ட விரலை நீரில் வைத்து ஊறவிடவும்.அதன் பின்னர் விரலை துடைத்துவிட்டு சிறிது வினிகரை அப்ளை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

1)எலுமிச்சம் பழம்

நகசுத்தி வந்தால் அனைவரும் உபயோகிக்கும் கை மருந்து எலுமிச்சை.இந்த பழம் நகசுத்தி பாதித்த விரலுக்குள் நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு புகுத்த வேண்டும்.இப்படி செய்தால் சில தினங்களில் நகசுத்தி குணமாகிவிடும்.

1)மஞ்சள்
2)வேப்ப எண்ணெய்

இந்த இரண்டு பொருளையும் சம அளவு எடுத்து நகசுத்தி பாதித்த விரல் மீது தடவினால் அவை விரைவில் குணமாகிவிடும்.இதுபோன்ற வீட்டு வைத்தியங்கள் செய்து நக சுத்தியை குணமாக்கி கொள்ளுங்கள்.