சிறுநீர் கடுகடுப்பு சிறுநீர்த்தாரை எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல் சரியாக!

0
424

சிறுநீர் கடுகடுப்பு சிறுநீர்த்தாரை எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல் சரியாக!

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
ஒரே நிமிடத்தில் இதனை சரி செய்யக்கூடிய வீட்டு குறிப்பு ஒன்றைப் பார்க்கலாம்.

சுடு தண்ணீர்:

1.கை பொறுக்கும் அளவிற்கு சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக சூடு இருக்கக்கூடாது அப்படி இருந்தால் புண்கள் ஏற்பட்டு விடும்.
2.சுடு தண்ணீரில் கல் உப்பை 2 ஸ்பூன் போட்டு கொள்ளவும் அல்லது வீட்டில்  உள்ள தூள் உப்பை பயன்படுத்தலாம்.
3. இப்பொழுது இந்த தண்ணீரை நீங்கள் பாத்ரூமுக்கு எடுத்துச் சென்று நம் உடம்பில் அந்த பகுதியின் மேல் தண்ணீரை வீசி விடவும்.
4. நிமிடத்தில் வலி நீங்கி உடனடியாக எரிச்சல் நீங்கி சிறுநீர் தடையின்றி வந்துவிடும்.

சின்ன வெங்காயம்:

1.சிறிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அப்படியே மென்று விழுங்கினால் இந்த சிறுநீர் தாரை எரிச்சல், சிறுநீர் கடுப்பு நீங்கும். ஏனெனில் வெங்காயத்தில் நோய்களை அளிக்கக் கூடிய ஆற்றல் உள்ளதால் இதை சாப்பிடும் பொழுது கடுகடுப்பு நீங்கி சிறுநீர் பிரச்சனை சரியாகும்.

சிறுநீர் பிரச்சனை நீங்க முத்திரை;

ஆண்களுக்கு பொதுவாக இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும்.அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது குழந்தைகள் பள்ளிகளில் இருக்கும் பொழுதோ இந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டுமெனில் கால்களை நன்றாக தொங்கப் போட்டு விட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது கால்கள் தரையில் படாதவாறு கீழ் ஏதாவது துணி அல்லது மேட் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கைகளில் உள்ள கட்டை விரல் ,மோதிர விரல், நடுவிரல் மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும். கை மேல் நோக்கி இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை செய்து இரு தொடைகளின் மீது வைத்து 10 நிமிடம் இருந்தால் சிறுநீர் எரிச்சல் பிரச்சினையை உடனடியாக நீங்கும்

Previous articleஒரே பொருள் போதும் 5 நிமிடத்தில் கருத்துப்போன கவரிங் நகைகளை புதிதுபோல் மாற்றலாம் 
Next articleகுளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!