ஒரு தடவை தடவினால் போதும் பொடுகு எல்லாம் போய்விடும்!
இன்றைய நாட்களில் அனைவருக்கும் பொடுகு பிரச்சனை இருக்கின்றது. பொடுகு பிரச்சனை ஏற்பட்டால் தலையில் அரிப்பு எடுத்துக்கொண்டே இருக்கும். இன்னும் அதிகமானால் முகத்தில் ஒரு சில முகப்பருக்கள் மற்றும் அரிப்புகள் கூட ஏற்படலாம்.
இயற்கையான முறையில் பொடுகை எப்படி விரட்டுவது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
2. ஓமம் ஒரு ஸ்பூன்
3. எலுமிச்சை பழச் சாறு 2 ஸ்பூன்
4. கற்றாழை 3 ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.
2. அது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விடவும்.
3. எலுமிச்சை பழச் சாறு 2 ஸ்பூன் விடவும்.
4. பிறகு ஓமத்தை நன்றாக கையில் தேய்த்து விட்டு அதில் போடவும்.
5. பிறகு சுத்தமான கற்றாழையை பிடுங்கி வந்து தோல் நீக்கி இருமுறை கழுவி அதை மிக்சியில் போட்டு அடித்தால் ஒரு சாறு வரும் அந்த கற்றாழை ஜெல்லை 3 ஸ்பூன் கலக்கி வைத்துள்ள கலவையில் போடவும்.
6. அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
1. கலக்கி வைத்திருக்கும் கலவையை கையில் எடுத்து நன்றாக மயிர் கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.
2. அந்த ஜெல்லானது தலையில் நன்கு ஊறவேண்டும்.
3. ஒரு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.
4. ஒரு மணி நேரம் ஊறிய பின் மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசி விடவும்.
வாரத்திற்கு மூன்று முறை என மூன்று வாரம் தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு இருந்த இடம் தெரியாமல் விரைவாக ஓடி விடும்.