வாயுத் தொந்தரவால் அசிங்க படுகிறீர்களா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

Photo of author

By Kowsalya

வாயுத் தொந்தரவால் அசிங்க படுகிறீர்களா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாய்வு தொந்தரவு என்பது அனைவரும் அசிங்கப்பட கூடிய ஒரு விஷயம் ஆகும். ஆனால் அது எதனால் வருகிறது என்பது யாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள்.

இதை எப்படி சரி செய்வது என்பது மற்றவர்களிடம் கேட்கவே நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் 3 நாட்களில் உங்களது வாயு தொந்தரவு சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1. ஓமம் 50 கிராம்

2. சீரகம் 50 கிராம்

செய்முறை:

1.  அடுப்பில் கடாயை வைத்து ஓமம் மற்றும் சீரகம் சம அளவில் எடுத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். அதிகமாக வறுக்கக் கூடாது அப்படி வறுத்தால் அதனுடைய சத்துக்கள் முழுவதும் போய்விடும்

2. வறுத்தவுடன் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

3.இந்த பொடியை நீங்கள் கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது நீங்கள் எடுத்த உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4.இதனை நன்கு சூடான தண்ணீரில் கால் டீஸ்பூன் அளவு போட்டு 3 நிமிடம் கழித்து அதனை இளம் சூட்டில் பருகுங்கள்.

5.சுவைக்காக வேண்டுமெனில் நீங்கள் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் வாயுத் தொந்தரவுகள் இருக்காது. புளி  ஏப்பம் வருதல் கட்டுப்படும் மற்றும் சீரகம் நமது உடலில் செரிமானத்தை அதிகப்படுத்தி வாயு தொந்தரவை கட்டுப்படுத்தும். இதனை நீங்கள் குடித்து வந்தால் உங்களது தொப்பையை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மேலும் வயிற்று மந்தம் நீங்கும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு அதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கண்டிப்பாக இதனை பயன்படுத்தி பாருங்கள் நல்ல தீர்வு கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.