ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை குறைக்கும் இயற்கை வழிமுறை!

Photo of author

By Kowsalya

பொதுவாக பெண்களுக்கு அதிக இடுப்பு வலி ஏற்படும். அதிக நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பதனால் மற்றும் ஆப்ரேஷன் செய்து இருந்தாலும் அவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். இடுப்பு வலியோடு முதுகு வலி கழுத்து வலி என அனைத்து வலிகளும் பின்னரே வந்துவிடும்.

இதை எப்படி குணப்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

அதற்கு நமக்கு முதலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் தான் தேவை.

தேவையான பொருட்கள்:

1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஒரு டம்ளர்

2. அரை ஸ்பூன் நல்லெண்ணெய்

3. அரை ஸ்பூன் சீரகப் பொடி

4. உப்பு

செய்முறை:

1. முதலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை கீழே ஊற்றாமல் அதை ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரை ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி கலந்து கொள்ளவும்.

3. பின் சீரகத்தை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

4. தேவையான அளவு உப்பு நன்றாக கலந்து கொள்ளவும்.

இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து நீங்கள் குடித்து வரும்பொழுது பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி குறைந்துவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியும் குறைந்து விடும்.