கை கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி சரியாக இதை மட்டும் சாப்பிடுங்க!

0
158

கை கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி சரியாக இதை மட்டும் சாப்பிடுங்க!

30 வயதைத் தாண்டினாலே கால்சியம் குறைபாடு ஏற்பட்டு கைகால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என அனைத்து பிரச்சினைகளும் வந்து விடுகின்றது. கால்சியம் குறைபாடு தானே என்று நினைத்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. இப்பொழுது இயற்கையான முறையில் அனைத்து வலிகளையும் நீக்கக்கூடிய அருமையான பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பிரண்டை துவையல்:

செய்ய தேவையான பொருட்கள்:

1. பிரண்டை 200 கிராம்

2. காய்ந்த மிளகாய்-6

3. சீரகம் ஒரு ஸ்பூன்

4. பூண்டு பத்து பல்

5. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது.

6. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

7. தக்காளி ஒன்று

8. மஞ்சள் கால் டீஸ்பூன்

9. புளி -எலுமிச்சை அளவு

10. உப்பு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நார்களை எடுத்து விடவும். கை அரிக்கும் அதனால் பார்த்து எடுக்கவும்.

1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ( நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்) ஊற்றவும்.

2. நார்கள் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வைத்திருக்கும் பிரண்டையை எண்ணையில் போட்டு வதக்கவும்.

3. நன்கு நிறம் மாறியதும் எடுத்து விடவும்.

4. அதே சட்டியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுத்தம் பருப்பைப் போடவும்.

5. 6 காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

6. பூண்டை பத்து போல் போடவும்.

7. அதிலேயே புளியை போட்டு விடவும்.

8. நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

9. அதில் வெட்டி வைத்த ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.

10. பின் வதக்கி வைத்திருக்கும் பிரண்டையை எடுத்து இதில் போடவும்.

11. நன்கு வதங்கி கலர் மாறிய பின்

அதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

10. பின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

11. பிரண்டை துவையல் தயார்.

இந்த பிரண்டைத் துவையலை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

தொடர்ந்து இந்த பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வரும் போது கை கால் மூட்டு வலிகள் இல்லாமல் நலமுடன் வாழலாம்.

Previous articleஒரு தடவை தடவினால் போதும் பொடுகு எல்லாம் போய்விடும்!
Next articleநூலிலையில் வென்ற இங்கிலாந்து வார்னரின் அரைசதம் வீண்