5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

Photo of author

By Kowsalya

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

தூக்கமின்மையால் வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களின் அறிகுறியாக கருவளையம் வரும். கருவளையம் முக அழகைக் கெடுக்கும். கருவளையம் நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி.

இந்த முறையை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவில் இரண்டு சொட்டு எடுத்து கருவளையத்தில் தேய்த்துவர முழுமையாக கருவளையம் மறையும்.

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு-1

2. கற்றாழை ஜெல்

3. ஆமணக்கு எண்ணெய்(விளக்கெண்ணெய்)

செய்முறை:

1.முதலில் ஒரு பச்சையான உருளைக்கிழங்கை எடுத்து கழுவி தோல் சீவி அதனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சிறிய உரலில் போட்டு நசுக்கவும். மிக்ஸியில் போட்டு கூட அரைத்துக் கொள்ளலாம்.

2. ஒரு சிறிய bowl எடுத்து அதில் உருளைக்கிழங்கு அரைத்ததை  எடுத்து வடிகட்டி அந்த சாறை எடுத்துக்கொள்ளவும்.

3. அந்த சாற்றில் சிறிதளவு கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும்.

4. அந்த கலவையில் ஒரு நான்கு சொட்டு விளக்கெண்ணெய் விடவும்.

5. நன்றாகக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

6. இது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை கெடாது. இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

இரவில் படுக்கும்பொழுது இதனை சிறிதளவு கையிலெடுத்து கருவளையத்தின் மீது நன்கு தேய்த்து விடவும். காலையில் எழுந்ததும் கழுவி விடவும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து போகும் மீண்டும் வராது.