உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

Photo of author

By Kowsalya

உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!

Kowsalya

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம்.

மனிதர்கள் தங்களது உருவத்திற்கு ஏற்ற உடல் எடையை கொண்டு இருக்க வேண்டும்; எடை அதிகம் இருந்தாலும், உடல் எடை குறைவாக இருந்தாலும் அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது. ஆகையால், இந்த பதிப்பில் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. வெண்பூசணி விதை

2. பால் ஒரு டம்ளர்

3. நாட்டு சர்க்கரை தேவையான அளவு.

செய்முறை:

1. வெண் பூசணி விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது வெண்பூசணியை வாங்கி உள்ளே உள்ள விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி மேலே உள்ள தோலை மட்டும் நீக்கி விட்டு உள்ளே உள்ள பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

2. அந்த பருப்பை நன்கு பொடியாக்கிக் எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

3. இப்பொழுது ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பொடியாக்கி வைத்த வெண்பூசணி விதைகளை போட்டு கொள்ளவும்.

4. அதனுடன் ஒரு டம்ளர் சூடான பசும்பாலை சேர்க்கவும்.

5. தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளவும் அல்லது வெல்லம் கூட பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

1. இந்தப் பாலை காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு  குடிக்க வேண்டும்.

2. இரவு படுக்கச் செல்வதற்கு முன் குடிக்க வேண்டும்.

இந்தப் பாலை தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்து வர  10 நாளில் 5 கிலோ அளவிற்கு உங்கள் உடல் எடை அதிகமாவதை நீங்கள் காணலாம்.