எப்பேர்பட்ட நெஞ்சுசளி இருமலும் குடித்தவுடன் சரியாகிவிடும்! உடல் சோர்வு இடுப்பு வலி உடனே நீங்கிவிடும்!

Photo of author

By Kowsalya

எப்பேர்பட்ட நெஞ்சு சளி இருமலும் உடனடியாக நீங்கி உடல் சோர்வு மற்றும் வலிகள் அனைத்தையும் நீக்கக் கூடிய இயற்கை வழி ஒன்றை பார்க்க போகின்றோம். இது மிகவும் பயனுள்ள குறிப்பாக உங்களுக்கு அமையும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை.

2. மிளகு 15

3. மஞ்சள் கால் டீஸ்பூன்

4. உப்பு தேவையான அளவு.

செய்முறை:

1. முதலில் ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

3. பிறகு ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை போட்டுக் கொள்ளவும். முருங்கைக் கீரையுடன் முருங்கைக்கீரை காம்புகளை சேர்ப்பதனால், அதில் உள்ள இரும்புச் சத்துக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். அதனால் முருங்கைக்கீரை காம்புகளையும் சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

4. பிறகு மிளகை எடுத்து உரலில் இடித்து கீரையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

6. மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

7. ஒரு டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடவும்.

8. பின் இதனை வடிகட்டிக் டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.

 

இதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கலாம்.

அப்படி நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நெஞ்சு சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.

முருங்கைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் தன்மை கொண்டது.