தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!!

0
167
Hot air will blow in Tamil Nadu till tomorrow!! Chennai Meteorological Center where the sun hits a hundred!!
Hot air will blow in Tamil Nadu till tomorrow!! Chennai Meteorological Center where the sun hits a hundred!!

தமிழகத்தில் நாளை வரை வெப்ப காற்று வீசும்!! வெயில் சதம் அடிக்கும் சென்னை வானிலை மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 5  ஆம் தேதி வரை  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  இன்று முதல் ஆகஸ்ட்  5  ஆம் தேதி வரை கோடை வெப்பத்திற்கு நிகராக வெப்பம் வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கேரளா, கர்நாடக பருவமழை குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கடல் காற்று திசை மாற்றம் காரணமாக வெயிலின் தங்ககம் அதிகரித்துள்ளது.

சென்னையில் 48 மணி நேரம் கடலோர பகுதியில் காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம்  தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் மணிக்கு 35  கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப காற்று வீசக் கூடும்.

அதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் பதிவாகும். மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை சதம் அடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் அதிகபட்சம் 106. 88 டிகிரி பரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

 

Previous articleஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!!
Next articleஅடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!