அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!

0
115
The hero of
The hero of "Good Night" who will debut in the next film!! Vijay Sethupathi put the spin on Pilliyar!!

அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!

தற்போது திரைத்துறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு படம் தான் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கி, மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் குறைந்த நாட்களிலேயே இயக்குனருக்கு நல்ல வசூலை ஈட்டி தந்திருக்கிறது. மேலும், இதில் இடம் பிடித்திருக்கூடிய “நா காலி” என்னும் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இப்படத்தில் ஒரு குறட்டை ஒலியை மையமாக வைத்து நடித்திருக்கும் மணிகண்டனின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. நகைச்சுவை நிறைந்து இருக்ககூடிய இப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து அடுத்த படத்திற்கு நடிகர் மணிகண்டன் தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ள பிரபு ராம் இயக்கத்தில் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டேயின்மென்ட் ஆகியோரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கெளரி பிரியா ரெட்டி நடிக்க இருக்கிறார். இது ரசிகர்கள் இடையே வேகமாகி பரவி அனைவரும் மணிகண்டனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இவரின் படபிடிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்து சிறப்பு செய்துள்ளார். இப்ப்டத்திற்காக பூஜை போடப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புது விதமான ஜோடியை கூடிய விரைவில் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

author avatar
CineDesk