வீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்!
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டம். தேனி மாவட்டத்தில் கீழ்கண்ட 3 திட்டப்பகுதிகளில் 1223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி
முடிக்கபட்டு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளன. மேலும், கீழ்கண்ட நான்கு
திட்டப்பகுதிகளில் 1104 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன.
இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு
பகுதியில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை
அளிக்கப்படும். மேலும், நகர்ப்புர வீடற்ற ஏழைகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த
பிரிவினர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது .
தற்போழுது “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு மானியத்துடன்
பயனாளிகள் பயன் பெறுவதற்கு சிறப்பு முகாம் 20.07.2022முதல் 23.07.2022 வரை
நடைபெறவுள்ளது. இதற்கான திட்ட விபரங்கள் பின்வருமாறு
வடவீரநாயக்கன்பட்டியில் – 312 (G+2) அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும்
தப்புக்குண்டு -431( G+2) அடுக்குமாடி குடியிருப்புகள் முகாம் நடைபெறும் இடம் வட்டாட்சியர்
அலுவலகம் தேனி. சிக்காட்சி அம்மன் கோவில் மேடு திட்டப்பகுதி -480(G+3)அடுக்குமாடி
குடியிருப்புகள் முகாம் நடைபெறும் இடம் நகராட்சி அலுவலகம் சின்னமனுார் . மேற்கண்ட
மூன்று திட்டப்பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டு அரசால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளின்
பங்களிப்புத் தொகை ரூ.2,15,000/- செலுத்த வேண்டும்.
அப்பிபட்டி திட்டப்பகுதி -432 (G+2) அடுக்குமாடி குடியிருப்புகள்
இக்குடியிருப்புக்கான பயனாளி பங்குத் தொகை ரூ 2,15,000/- சிறப்பு முகாம் நடைபெறும் இடம்
:நகராட்சி அலுவலகம், சின்னமனூர். பரமசிவன் கோவில் மேடு திட்டப்பகுதி – 168(G+2) அடுக்குமாடி குடியிருப்புகள் இக்குடியிருப்புக்கான பயனாளி பங்குத் தொகை ரூ 2,23,000/-
சிறப்பு முகாம் நடைபெறும் இடம் : நகராட்சி அலுவலகம், போடிநாயக்கனூர்.மீனாட்சிபுரம்
திட்டப்பகுதி -240 (G+2) அடுக்குமாடி குடியிருப்புகள் இக்குடியிருப்புக்கான பயனாளி பங்குத்
தொகை ரூ 2,53,000/- சிறப்பு முகாம் நடைபெறும் இடம் :நகராட்சி அலுவலகம், போடிநாயக்கனூர். தமணம்பட்டி திட்டப்பகுதி 264( G+3) அடுக்குமாடி குடியிருப்புகள்
இக்குடியிருப்புக்கான பயனாளி பங்குத் தொகை ரூ.2,12,000/- சிறப்பு முகாம் நடைபெறும் இடம் : நகராட்சி அலுவலகம், கூடலூர். மேற்கண்ட நான்கு திட்டப்பகுதிகளும் கட்டிமுடிக்கும்
தருவாயில் உள்ளன.
‘அனைவருக்கும் வீடு ‘ வழங்கும் திட்ட விதிகளின் படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு
இத்திட்டப்பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர், கீழ் கண்ட
விபரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1) விண்ணப்பதாரர் பெயரிலோ, அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும்
வீடோ, வீட்டடி மனையோ இருக்க கூடாது .
2) விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.25,000/-க்குள் இருக்க வேண்டும்
3) விண்ணப்பதாரர் மற்றும் மனைவி/கணவன் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்
4) பயனாளியின் பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கான சம்மதக் கடிதம்
இணைக்கப்பட வேண்டும்
5) விண்ணப்பதாரர் முன் பணமாக ரூ10,000/-க்கான வங்கி வரவோலையை THE
EXCUTIVE ENGINEER, TNUHDB, Madurai Division Madurai என்ற பெயரில்
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் .
மேற்கண்ட திட்டப்பகுதிகளில் குடியிருப்பு வேண்டுவோர் விண்ணப்பிப்பதற்கு
20.07.2022 முதல் 23.07.2022 ஆகிய நான்கு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் . க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.