தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

0
85

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

தெலுங்கு சினிமாவினர் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்களின் விலை உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் ஆகஸ்ட்  1 ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இந்த ஸ்ட்ரைக்கால் தெலுங்கு சினிமாவைப் போலவே தமிழ் சினிமாவும் அதிகளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தமிழ் முன்னணி நடிகர்களின்  படங்கள் பெரும்பாலும் ஐதராபாத்தில்தான் படமாக்கப்படுகின்றன. சமீபத்தில் அஜித் 61 மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடந்தன.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. அதற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று அங்கு போடப்பட்டு இருந்தது. இந்த ஸ்ட்ரைக்கால் இப்போது ஜெயிலர் ஷூட்டிங் தொடங்குவது தாமதமாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர்  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.