எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

0
121
#image_title

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

இன்றைய பல இளைஞர்களுக்கு குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஜெப் பெசோஸ் தான். புதிய, புதிய தொழில்முனைவோர்கள் உருவாக காரணமானரும் இவர் தான். ஜெப் பெசோஸ் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆரம்பப் புள்ளி மற்றும் வளர்ச்சி குறித்து இங்கு பார்க்கலாம்.

இணைய வழி தொழிலைத் தொடங்க விரும்பிய ஜெப் பெசோஸ், இணையத்தின் மூலம் என்ன பொருட்கள் எல்லாம் வாங்க முடியும் என்பதையும் தேடினார். அந்த நேரத்தில் 20 பொருட்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் அனுமதி இருந்தது. அதில் புத்தக விற்பனையை தேர்வு செய்தார் ஜெஃப். இணையத்தின் மூலம் புத்தகங்கள் விற்பனை செய்யும் ‘கடாப்ரா’ என்ற ஸ்டார்ட்அப்-ஐ தொடங்கினார். ஒரு சிறிய அறையில் 10,000 டாலர் முதலீட்டுடன் ‘கடாப்ரா’ என்ற பிராண்ட் உருவானது. அந்தப் பெயரை உச்சரிக்க மக்களுக்கு சிரமமாக இருந்ததால் பிராண்டின் பெயரை மாற்றினார் ஜெஃப். ஒரு பிராண்டின் பெயர் எப்போதும் உச்சரிக்க எளிதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், அதை மாற்றுவது சிறந்தது.

அமெரிக்காவின் மிகப்பெரிய அமேசான் ஆற்றின் பெயரை தன் பிராண்டுக்கு வைத்தார். ஜெஃப். பிற்காலத்தில் அமேசான் மிகப் பெரிய புத்தகக் கடலாக இருக்கும் என்பதே அப்போது அவரின் திட்டமாக இருந்தது. இந்தப் பெயர் மெல்ல மக்களிடம் பரவத் தொடங்கியது. அடுத்தடுத்து புத்தகங்களின் ஆர்டர்கள் குவியத் தொடங்கின. மக்களிடம் முதலீடுகளைக் கோரி நேரடியாகப் பங்குச் சந்தையில் களமிறங்கினார். 1995-ம் வருடம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தலைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த அமேசான் நிறுவனம், ‘பூமியின் மிகப்பெரிய புத்தகக் கடை’ என்று தன்னை அழைத்துக் கொண்டது.

அமேசான் நிறுவனத்தின் இரண்டாம் அத்தியாயம்:-

குறுந்தகடுகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள்களை அமேசான் என்னும் தன்னுடைய பிராண்டுக்குள் நுழைத்தார். அடுத்தபடியாக, அமேசான் பிரைம் திட்டத்தைச் செயல் படுத்தினார். தான் ஆரம்பித்த புத்தக விற்பனையின் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க மின் புத்தகங்களை எளிதாகப் படிக்க அமேசான் கிண்டில் என்ற சாதனத்தை அறிமுகம் செய்தார்.

புத்தகம் வாங்குவதை நிறுத்தியவர்கள் கூட கிண்டில் மூலமாக வாசிப்பைத் தொடர்ந்தனர். அதன்பின், அமேசான் பிரைம் என்கிற ஓ.டி. டி-யை அறிமுகம் செய்து, இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களைப் பெற்றனர். பல சறுக்கல்கள், போட்டிகளைக் கடந்து தற்போது அமேசானின் சொத்து மதிப்பு 252.8 பில்லியன் டாலர்களை எட்டி, உலகின் தவிர்க்க முடியாத பிசினஸ் சம்ராஜ்யத்தை உருவாகியுள்ளது.

இணைய உலகிலும், தொழில்நுட்பத் துறையிலும் மிகப்பெரிய சம்ராட் ஆக உருவாகியுள்ள ஜெப் பெசோஸ், தன்னுடைய பயணத்தை இன்னும் வெற்றிகரமான தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

 

 

Previous articleஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன?
Next articleஎன்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!