மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி?

Photo of author

By Anand

மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி?

Anand

How did an accident happen in Madhya Pradesh that killed 35 people in a single day?

மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 35 பேரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோவிலில் படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேரில் சென்று பார்வையிட்டார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில், நேற்று ராமநவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

விழாவின் ஒருபகுதியாக தீப சடங்கு நடண்டுள்ளது. இதனையொட்டி அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் சரிந்து விழுந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

Indore Temple Accident
#image_title

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கிணற்றில் உள்ளே விழுந்தவர்களில் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று அம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்