உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் எப்படி செயல்படுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்!

Photo of author

By Kowsalya

உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் எப்படி செயல்படுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்!

நோய்த் தொற்றால் ஒருவரது நுரையீரல் மிகவும் பாதிக்கப்படும் பொழுது அவற்றை பாதுகாத்து சுவாச செயல்பாட்டை சரிசெய்ய வென்டிலேட்டர் பயன்படுகிறது.

வென்டிலேட்டர்கள் நோயாளிகள் மீண்டும் உயிர் பெறுவதற்கான ஒரு அவகாசம் என்றே கூறலாம்.

Covid-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படும் 80% மக்கள் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலே பாதிக்குப் பாதி மக்கள் குணமடைகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் நோய் தொற்று ஏற்பட்ட ஆறில் ஒருவருக்கு மிகவும் மோசமான சுவாச பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் நுரையீரல் நாளடைவில் மிகவும் மோசமான நிலைக்கு மாறுகிறது. அப்பொழுது இந்த வென்டிலேட்டர்கள் நோயாளியின் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதனால் அதிக அளவில் நோய்எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன.

நோய் தொற்றால் அதிக அளவு நீர் நுரையீரலுக்குள் செல்வதனால் நோயாளிகள் மூச்சு விடுவதற்கே சிரமப்படுகின்றனர். அதனால் வென்டிலேட்டர்கள் மிகுந்த அளவு ஆக்சிஜன் உடைய காற்றை நுரையீரலுக்கு செலுத்துகிறது.

வென்டிலேட்டர்கள் நோயாளியின் வெப்பத்திற்கு ஏற்ப நோயாளிகளின் உடல் அமைப்பை மாற்றி அமைக்கிறது.

சுவாச சம்பந்தமான அனைத்து செயல்பாட்டையும் வென்டிலேட்டர் பார்த்துக் கொள்வதால் சுவாசத் தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.

லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு முக கவசம், வாய்வழி கவசம், நாசி வழி கவசங்கள் மூலம் நுரையீரலுக்கு காற்று அனுப்பப்படுகிறது.

வென்டிலேட்டர்களை கையாள்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதன் தொழில் நுட்பமும் சவாலான விஷயம் ஆனதே. கொஞ்சம் ஏதாவது மாறுதல் ஏற்பட்டாலும் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு வகையான வென்டிலேட்டர்கள் இருப்பதால் அனைவருக்கும் அதை பயன்படுத்த தெரிந்திருக்காது.

இதுதான் வென்டிலேட்டர்களின் செயல்பாடு