காப்பர் T கருத்தரித்தலை எவ்வாறு தடுக்கிறது? Copper T பொருத்தும் முறை பற்றிய தெளிவான விளக்கம்!!

Photo of author

By Divya

காப்பர் T கருத்தரித்தலை எவ்வாறு தடுக்கிறது? Copper T பொருத்தும் முறை பற்றிய தெளிவான விளக்கம்!!

Divya

உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள தற்காலிகமாக விருப்பம் இல்லையென்றால் நீங்கள் காப்பர் டி என்ற கருத்தடை உபகரணத்தை பயன்படுத்தலாம்.ஆனால் காப்பர் டி உபகரணம் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்கள் இடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

குழந்தை பெற்றவர்கள் இனி குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதபட்சத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.அதுவே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளிவைக்க விரும்புபவர்கள் காப்பர் டி உபகரணத்தை பயன்படுத்துகின்றனர்.

காண்டம்,கருத்தடை மாத்திரைகளை போன்றே காப்பர் டி சாதனமும் பாலியல் உறவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.காப்பர் டி சாதனம் காப்பர் அதாவது செம்பு உலோகத்தால் செய்யப்பட்டவை ஆகும்.

இந்த காப்பர் டி சாதனம் கருப்பைக்குள் செல்லும் விந்தணுவை அழிக்கும் வேலையை செய்கிறது.உடலுறவிற்கு முன் இந்த காப்பர் டி சாதனத்தை பெண்கள் பொருத்திக் கொண்டால் ஆண் துணையிடம் இருந்து வரும் விந்தணு கருமுட்டையை நெருங்காமல் கருவுறுதலை தடுத்துவிடும்.காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழித்து கருத்தரித்தலை தடுக்க உதவுகிறது.

காப்பர் டி பொருத்தப்பட்ட பெண்ணின் கருப்பைக்குள் ஆணின் விந்தணு வேகமாக நீந்தி செல்லும் பொழுது அங்குள்ள வெள்ளை அணுக்கள் விந்துக்களை செயலிழக்கச் செய்துவிடுகிறது.

காப்பர் டி பொருத்துவது எப்படி?

தற்காலிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத பெண்கள் காப்பர் டி பொருத்திக் கொள்ள விரும்பினால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.நீங்கள் காப்பர் டியை குறைவான அல்லது நீண்ட ஆண்டுகள் என்று எவ்வளவு காலத்திற்கு பொருத்திக் கொள்கிறீர்கள் என்பதை மருத்துவரிடம் விளக்க வேண்டும்.ஒருசில காப்பர் டிக்கல் 10 முதல் 12 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சி முடியும் நாளில் பொருத்திக் கொள்ள வேண்டும்.காப்பர் டி பொருத்திய பின்னர் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.காப்பர் டி பொருத்திய பின்னர் அதிக உதிரப்போக்கு,வயிற்று வலி,மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

காப்பர் டி பொருத்திய சில பெண்களுக்கு உடலுறவின் போது வலி,அதிக இரத்தப்போக்கு,வெள்ளைப்படுதல்,யோனி பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.