கணவன் மனைவி உறவில் விரைவில் அது வந்து விடுகிறதா? காரணம் இது தான்

Photo of author

By CineDesk

கணவன் மனைவி உறவில் விரைவில் அது வந்து விடுகிறதா? காரணம் இது தான்

புதியதாக திருமணம் ஆனவர்கள் முதல் ஏற்கனவே திருமணம் ஆன தம்பதிகள் வரை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை உறவின் போது ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியாவது தான்.

குறிப்பாக இந்த பிரச்சனை உள்ளவர்கள் முதலில் சரியான மருத்துவரை அணுகி இதற்கு காரணம் உடலா அல்லது மனதா என்று கண்டறிய வேண்டும்.

அந்த வகையில் உடல் சார்ந்த பிரச்சனையாக இருப்பின் முதலில் உங்களுடலில் உள்ள பாதிப்புகள், ஊட்டச்சத்துக் குறைவு முதலியவற்றை மருத்துவரின் ஆலோசனை மூலமாக அறிந்து, அவற்றைக் சரி செய்ய முயலுங்கள்.

உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிலையில் அடுத்தது மனது தான் காரணமாக இருக்க முடியும்.

அதாவது திருமணமானவர்கள் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போன்று உறவு குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு, மனப்பதற்றம் மற்றும் இதில் எதையோ சாதிக்கவேண்டும் என்ற தன்முனைப்பு உள்ளிட்டவைகளை கொண்டு ஈடுபடுவர்.இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது சாதாரணமே அதனால் இதை அறவே தவிருங்கள். மிகவும், இயல்பாகவும், நிறைவாகவும், நிதானமாகவும், உடலுறவை ரசித்தும், லயித்தும் உங்கள் இணையுடன் உறவில் ஈடுபடுங்கள்.

அடுத்து வயிறு புடைக்க உணவை உண்டவுடன் உடலுறவை மேற்கொள்வதும், சரியாக உண்ணாமல் பசியுடன் உடலுறவை மேற்கொள்வதும் இது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். அடுத்ததாக வேலைப்பளு காரணமாக உடல் அசதியாக இருக்கும்போதும் மனைவியுடன் உடலுறவை மேற்கொள்ளாதீர்கள்.

நீங்கள் உண்ணும் உணவில் அதிக புளிப்பு, கார மற்றும் மசாலாச் சுவை உள்ள உணவுவகைகளை உடலுறவிற்கு முன்பு உட்கொள்வதை நிறுத்துங்கள்.இந்த உணவுகளுக்கு விந்து முந்தச்செய்யும் திறன் உள்ளது.

மேலும் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ, அதிக உடற்சூடு இருந்தால் அந்த நேரத்தில் உறவு கொள்ள வேண்டாம்.இருவருக்கும் உடல் சூடு நன்கு தணித்தபிறகே, உடலுறவு மேற்கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல் மனவளக்கலை மன்றத்தில் கற்றுத்தரப்படும் அஸ்வினி முத்திரை மற்றும் காயகல்ப பயிற்சி உள்ளிட்டவை இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். அதனால் தினமும், காலை, மாலை வேளைகளில் அவசியம் இந்த பயிற்சியினை அளவுடன் செய்து வரவும்.

குறிப்பாக அஸ்வினி முத்திரை பயிற்சியை செய்யும் ஆரம்ப நாட்களில் மட்டும் உடற்சூடு அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, அந்த சமயங்களில் இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை பருகவேண்டியது அவசியம்.

இது தவிர ஆர்வ கோளாறில் ஆபாசப்படங்கள் பார்த்து அதை போல செய்ய உந்துதல், அடுத்தவருடைய உறவு அனுபவங்களைக் கேட்டு அது போல செய்ய துணிவது ஆகியவற்றோடு உடலுறவை மேற்கொண்டாலும் இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்களிருவரின் உடல்வாகு, மனோபாவம், உள்ளிட்டவற்றுக்கேற்ற வகையில் இருவரும் உறவு கொள்ள முயல்வதே சிறந்தது.

ஆரம்பத்தில் சிலநாட்களுக்கு இருவருக்குள்ளும் வெறும் தீண்டல்கள், முத்தங்களை மட்டுமே பரிமாறுங்கள். அதே நேரத்தில் மனக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, விந்து முந்துதல் நேராதவாறும் பயிற்சியை செய்யுங்கள். இதில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு உடலுறவில் ஈடுபட்டால், விந்துமுந்துதல் பிரச்சினை பெரும்பாலும் இருக்காது.