உடலில் உள்ள எத்தனை நோய்களை குணப்படுத்துமா? இது தெரிந்தால் கிராம்பு தண்ணீரை விட மாட்டீர்கள்!!
கொதிக்கும் தண்ணீரில் கிராம்பு போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதை எப்போது எல்லாம் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிராம்பு பொதுவாகவே ஜீரணசக்தி கொண்டது. எந்தவித உணவாக இருந்தாலும் ஜீரணிக்க கிராம்பு உதவுகிறது. குறிப்பாக அசைவ உணவுகள் எதுவாக இருந்தாலும் எளிமையாக ஜீரணம் ஆக கிராம்பு உதவுகின்றது. அதனால் தான் அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது கிராம்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கிராம்பு நீரை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
கிராம்பு நீர் தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும். பிறகு இதில் நான்கு கிராம்பை நசுக்கி இதில் சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாக கொதிக்க வேண்டும்.
தண்ணீரிண் நிறம் மாறுவதை பார்க்கலாம். பிறகு இதை இறக்கி வடிகட்டி மிதமான சூட்டில் அப்படியே குடிக்க வேண்டும். இந்த கிராம்பு தண்ணீரை காலையில் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடிக்கலாம். இது போல வாரத்தில் மூன்று நாட்கள் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த கிராம்பு தண்ணீரை எப்போது எல்லாம் குடிக்கலாம்…
* சளி, இருமல், ஜததோஷம் இருக்கும் பொழுது இந்த கிராம்பு நீரை குடிக்கலாம்.
* தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிராம்பு நீரை குடிக்கலாம்.
* உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கிராம்பு நீரை குடிக்க வேண்டும்.
* சீரான இரத்த ஓட்டம் இல்லாதவர்கள் இந்த கிராம்பு தண்ணீரை குடிக்க வேண்டும்.
* இதயத்தில் பாதிப்பு உள்ளவர்கள் அதாவது இதய நோய் உள்ளவர்கள் இந்த கிராம்பு தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* அதிகம் சாப்பிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்படும் பொழுது இந்த கிராம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.
* நம் பற்களின் ஆரேக்கியத்திற்கு கிராம்பு பெரிதும் சிறந்த மருந்தாக உள்ளது. பல்வலி உள்ளவர்கள் இந்த கிராம்பு தண்ணீரை குடிக்கும் பொழுது பல்வலி குறைகிறது.
* கல்லீரலை பாதுகாக்கவும் கணைய் சிறப்பாக செயல்படவும் இந்த கிராம்பு தண்ணீரை நாம் குடிக்கலாம்.
* உடல் சோம்பலுடன் இருக்கும் பொழுது இந்த கிராம்பு தண்ணீரை குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் சோம்பல் நீங்கி புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* எலும்புத் தேய்மானம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ககராம்பு தண்ணீரை குடிக்க வேண்டும்.
* மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கிராம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனை குணமாகும்.
* கிராம்பு தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் தொற்றுக் கிருமிகள் நம் உடலை தாக்காமல் இது பாதுகாக்கின்றது.
* கிராம்பில் உள்ள வேதிப் பொருள் நம் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது. புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் கிராம்பு தண்ணீர் குடிக்கலாம்.
கிராம்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது…
கிராம்பு உடலுக்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது வாந்தி, குமட்டல், தொண்டையில் புண், கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.
இன்னும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்றவையும் ஏற்படுகிறது.
யாரெல்லாம் கிராம்பை எடுக்கக் கூடாது…
* நீங்கள் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக இருந்தால் கிராம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ள கூடாது.
* இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்இந்த கிராம்பு நீரை எடுத்துக் கொள்ளக் கூடாது.