எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எத்தனை மார்க்?… பரபரக்கும் புதிய தலைமுறை சர்வே!

0
114
edappadi palaniswami
edappadi palaniswami

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிரபல செய்தி சேனலான புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில், அதிக பட்சமாக 158 தொகுதிகளை கைப்பற்றி திமுக தான் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 வரையிலான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் அதிமுக அரசுக்கு 76-83 வரையிலான இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரசின் செயல்பாடுகள், வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அப்படி கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 10க்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண் என 13.06 சதவீதம் பேரும், ஒரு மதிப்பெண் தான் தருவேன் என 10.01 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு 10க்கும் 10 மார்க் கொடுப்பதாக 7.39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பூஜ்ஜியம் மதிப்பெண்கள் என 4.91 சதவீதம் பேரும், ஒரு மதிப்பெண்கள் என 10.01 சதவீதம் பேரும், 2 சதவீதம் என 6.74 சதவீதம் பேரும், 3 மதிப்பெண்கள் என 7.06 சதவீதம் பேரும், 4 மதிப்பெண்கள் என 7.50 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். 5 மதிப்பெண்களுக்கு மேல் பதிலளித்துவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி பார்க்கும் போது 10க்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் அளிப்போம் 13.06 சதவீதம் பேரும், 7 மதிப்பெண்கள் என 8.92 சதவீதம் பேரும், 8 மதிப்பெண்கள் என 9.59 சதவீதம் பேரும், 10க்கு 10 மதிப்பெண்களை கொடுக்கிறேன் என 7.39 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இதில் 13.85% பேர் சொல்ல இயலாது என பதிலளித்துள்ளனர்.

Previous articleதிமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
Next articleகுஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?