குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

0
76

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மயிலாப்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து குஷ்புவும் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகும் முன்பே சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக அந்த தொகுதியை ஒதுக்காததை அடுத்து குஷ்புவிற்கு பாஜகவில் ஆதரவு அலை அதிகரிக்க ஆரம்பித்தது. வெயிட்டான தொகுதியில் குஷ்புவை களமிறக்கி திமுக, காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென திட்டமிட்டது. அதுக்கு ஏற்றாற் போலவே திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவிற்கு ஒதுக்கப்பட்டது. இங்கு குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலன் களமிறங்கியுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி ஆகிய அத்தியாவசியப் பிரச்சனைகளை நிச்சயம் தீர்த்து வைப்பேன் என்ற உறுதியுடன் குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.அவருக்கு ஆதரவாக முதன் முறையாக பிரபல இயக்குநரும், குஷ்புவின் கணவருமான சுந்தர் சி களத்தில் இறங்கி தேர்தல் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், திமுக என இருகட்சிகளில் குஷ்பு செயல்பட்ட போதும் தன்னை அரசியல் ரீதியாக காட்டிக்கொள்ளாமல் இருந்த சுந்தர் சி, முதன் முறையாக மனைவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து வாக்கு சேகரிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் குஷ்பு – சுந்தர் சி தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

author avatar
CineDesk