நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

0
140

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமானப் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.  நியூஸிலாந்தின் Air New Zealand விமான நிறுவனத்திற்குச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் பல எல்லைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. Air New Zealand-இன் லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 74 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறுவனம் கூறியது. Air New Zealand-இல் சுமார் 12,500 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆள்குறைப்பு செய்யப்பட்டலாம் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

Previous articleபாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரிலீஸ்!! கைல தம்முடன் கெத்தாக போஸ் கொடுத்த பிரபல நடிகை!!
Next articleஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?