உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பலரும் தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.உலர் விதைகளில் ஆளிவிதை அதிக நன்மைகளை கொடுக்கிறது.
தினமும் ஆளி விதை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1)இதில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் தினமும் உட்கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாகும்.
2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஆளிவிதை பானம் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
3)உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆளிவிதை பானம் பருகலாம்.ஆளிவிதையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
4)தினமும் ஆளிவிதை பானம் பருகி வந்தால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.ஆளிவிதையை ஊறவைத்து தலைக்கு தேய்த்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்
5)மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் ஆளிவிதையை ஊறவைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
6)ஆளிவிதை பானம் ஹார்மோனை சமநிலைப் படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஆளிவிதை பானத்தை பருகலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் ஆளிவிதை சாப்பிடுவதால் குணமாகும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு ஆளிவிதை சாப்பிட வேண்டும்?
ஆண்கள் ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி அளவிற்கு ஆளிவிதை எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் பெண்கள் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு ஆளிவிதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆளிவிதையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.இந்த ஆளிவிதை நீரை தலை மற்றும் சருமத்திற்கு அப்ளை செய்யலாம்.