அதிமுக கூட்டணியில் விஜய்க்கு எத்தனை சீட்டு!! ஆலோசனையில் சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி!!

Photo of author

By Vijay

TVK: அதிமுக உடன் தவெக கூட்டணியா? கூட்டணி வைத்தால் எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும்.

நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விஜய்க்கு எத்தனை சீட்டுகள் என்று சஸ்பென்ஸாக கூறியுள்ளாராம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது, அவர்கள் கூட்டணியில் பிரச்சனை உள்ளது.தற்போது அதிமுக வேகமாக வளர்ந்து வருகிறது.

திமுக கூட்டணி நிச்சயம் உடையும், எனவே நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால் தான் நமக்கு கூட்டணி கட்சிகள் நம்மோடு கைகோர்க்க தயாராக இருக்கும். அதற்காக நாம் ஒவ்வொரு மாவட்டங்களாக கட்சி கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு நாம் வலிமையாக இருந்தால் தான் நமக்கு அதிக இடங்கள் கிடைக்கும், மேலும் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்க முடியும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது, அதில் ‘நாம் வலிமையாக இருந்தால் தான் நமக்கு அதிக இடங்கள் கிடைக்கும், மேலும் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்க முடியும்’. என்று கூறியது விஜய் கூட்டணி குறித்து தான என்று கூறப்படுகிறது. விஜய் மாநாட்டிற்கு பின் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிமுக எந்த விமர்சனமும் செய்யாத நிலையில் இருவரும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.