நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதா? இதை பின்பற்றுங்கள்

0
68

அனைத்து உயிரிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.தண்ணீர் அதிகம் குடித்தாலே பல நோய்கள் உங்களை அண்டாது ஆனால் அவ்வாறு குடிக்கும் தண்ணீரை முறையாக குடித்தால் தாகத்தை தீர்க்க மட்டுமல்ல பல நோய்களுக்கும் இயற்கை மருந்தாக அமைகிறது.

எப்படி எல்லாம் தண்ணீரை அருந்தலாம் என்பதை அறிந்து உள்ளீர்களா!!

உறங்கச் செல்லும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் தூங்கும்போது மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் வெளியிலிருந்து வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வாயின் வழியே உள்ளே செல்லும் வைரஸ் மற்றும் தொற்று நோய்கள் தடுக்கப்படும்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உங்களால் குடிக்க முடிந்த அளவு தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் சீராக செயல்படுவதோடு மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது.

குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு குளிக்கச் சென்றால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு உணவை உட்கொண்டால் ஜீரண சக்தி அதிகமாகும்.

அதிகமாக உணவைச் சாப்பிட்டாலும் உடல் எடை கூட கூடாது என்று எண்ணுபவர்களுக்கு சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடித்து 10 to 15 நிமிடங்கள் கழித்து உணவை உண்ணுங்கள். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் எளிதாக ஜீரணம் அடைந்து விடும். அதனால் தேவையற்ற கொழுப்புகள் வயிற்றில் தங்காது எனவே உடல் பருமன் அதிகரிக்காது.

தண்ணீர் அதிகமாக அருந்துவது ஆரோக்கியம்தான் நம் உடலின் தாகத்திற்கு ஏற்றவாறு அருந்த வேண்டும். நம் உடலின் தாக்கத்திற்கு மீறி தண்ணீர் அருந்தினால் அது நம் உடலுக்கு உபாதை ஏற்படுத்தும். எனவே தாகத்திற்கு ஏற்ப நம் உடலின் தன்மைக்கு ஏற்ப தண்ணீரைக் குடித்தால் நல்ல பயன்களை தரும்.தண்ணீரை காய்ச்சி குடிப்பது மிகவும் சிறந்ததாகும்.