நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் உப்புச்சத்து தான்.
நல்லது என்றாலும் அளவாக இருப்பதுதான் நல்லது என்பது போல் உப்பு சுவையும் உணவில் அளவாக இருப்பதுதான் நல்லது.நம் உடலுக்கு தினசரி 2300 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது.ஆனால் நாம் நாளொன்றில் 12 கிராம் அளவிற்கு உப்பு சேர்த்து சாப்பிடுகின்றோம்.தின்பண்டங்கள்,உணவு என்று அனைத்திலும் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுகின்றோம்.
அளவிற்கு அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஏற்படும்.அதிக உப்பு சேர்த்து சாப்பிட்டால் இரத்தத்தில் இரத்தத்தில் சோடியம் அளவு அதிகரித்து வயிறு வீக்கம் ஏற்படும்.அதிக உப்பு சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
உணவில் அதிக உப்பு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் உணவில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் பாதிப்பு தீவிரமாகிவிடும்.அதிக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் சரும பாதிப்புகள் அதிகமாகிவிடும்.
அதிக உப்பு நிறைந்த உணவுகள் சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.உடலில் அதிக வியர்வை வெளியேறினால் பிரச்சனை இல்லை.வியர்வை மூலம் உப்பு வெளியேறிவிடும்.ஆனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறவில்லை உடலில் உப்பு குவிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பிபி இருப்பவர்கள் மிகவும் குறைவான அளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.