ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களை மலிவாகவும், விலை குறைவாகவும் பொது மக்களுக்கு அரசு வழங்குகிறது.
எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்கள் பெயரை எவ்வாறு சேர்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
இதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்களுக்கென்று ஒரு உள்நுழைவு ஐடியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது ஏற்கனவே ஒரு ஐடி வைத்திருந்தாலும் அதை வைத்து உள்நுழையலாம்.
பிறகு புதிய உறுப்பினர் பெயர் சேர்ப்பதற்கான விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் புதிதாக சேர்க்கப்படகூடிய குடும்ப உறுப்பினரின் பெயரை போட வேண்டும். அதன் பிறகு அனைத்து ஆவணங்களையும் படிவத்தில் சேர்க்க வேண்டும்.
இந்த படிவத்தை சமர்பித்த உடன் உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். விண்ணப்பத்திற்கு பிறகு உங்களது அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும். அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கடைசியாக ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினரின் பெயர் சேர்க்கப்படும்.
எனவே, இந்த வழிமுறையை பின்பற்றி அனைவரும் சுலபமாக ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.