ரூ.78000 மானியம் கிடைக்கும் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு சூரிய வீடு இலவச மின்சர திட்டத்தின் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதுமட்டும் இன்றி மாதம் 300 யூனிட் இலவச மின்சாரத்தை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டில் வருங்கால மின்சார தேவையை கருதி சூரிய ஒளி மின்சாரத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
“பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரம்” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 1 கிலோ வாட் திறன் கொண்டிருக்கும் சோலார் பேனல்களுக்கு ரூ.30,000 மற்றும் 2 கிலோ வாட் திறன் கொண்டிருக்கும் சோலார் பேனல்களுக்கு ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.
சூரிய வீடு இலவச மின்சர திட்டத்தில் விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதி:
1)இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2)சோலார் பேனல் அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்க வேண்டும்.
3)வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
4)பிற திட்டங்கள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்திற்கு மானியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
மேற்குறிப்பிட்டுள்ள தகுதி இருப்பவர்கள் www.pmsuryaghar.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையாள பக்கத்தில் தங்கள் மாநிலம், தங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் செய்யும் நிறுவனத்தை பதிவிட வேண்டும். பிறகு சோலார் பேனல் அமைக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அதில் பதிவு செய்ய வேண்டும். அடுத்து மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை லாக் இன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள நிறுவனத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனலை அமைக்க வேண்டும். அதன் பிறகு சோலார் பேனல் அமைத்த்து குறித்து தெரிவித்து மீட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிறகு மின் விநியோக நிறுவனம் சோலார் பேனலுக்கு மீட்டரைப் பொருத்தும். இவ்வாறு பொருத்திய பின்னர் இணையம் வழியாக அமைப்புச் சான்றிதழ் கிடைக்கும். அதை பெற்றுக் கொண்டு மானியம் பெற வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களில் தங்கள் வங்கி கணக்கிற்கு மானியத் தொகை செலுத்தப்பட்டு விடும்.