தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

0
175
How to Apply for Tamil Puthulvan Scheme?? Here are the full details!!
How to Apply for Tamil Puthulvan Scheme?? Here are the full details!!

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல நல திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. அந்த வகையில் காலை சிற்றுண்டி வழங்குவது, சைக்கிள், இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து அதிக எண்ணிக்கையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும் இத்திட்டம் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தமிழ் புலவன் திட்ட மூலம் மூன்று லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது பட்ஜெட் தாக்குதலில் தீர்மானம் ஆக்கப்பட்டதால் வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல ராமாமிர்தம் அம்மையாரின் திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற சில கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல இதற்கும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டம் பெறுவதற்கு மாணவிகள் கட்டாயம் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருப்பது கட்டாயம் மேலும் ஆதார் அட்டை அல்லது குடியிருப்புச் சான்று போன்றவை வழங்க வேண்டும். இதனையெல்லாம் சமர்ப்பித்தால் மட்டுமே புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு ஆயிரம் கிடைக்கும். இதே போல தமிழ் புதல்வன் திட்டத்திற்கும் விதிமுறைகள் வகுக்கப்படும் என்று கூறுகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பலர் பயனடைவதுடன் கல்லூர சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.