வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

0
247

வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக திகழ்வது வோட்டர் ஐடி தான். நம் நாட்டில் 18 வயதை எட்டிய அனைவரும் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இந்திய தேர்தல் ஆணையம் தகுதியான அனைவருக்கும் வோட்டர் ஐடி வழங்கி வருகிறது.

அதில் வாக்காளர் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும். இந்த வோட்டர் ஐடி அரசு நலத் திட்டங்களை பெறவும் உதவியாக இருக்கின்றது.

ஆன்லைன் மூலம் வோட்டர் ஐடிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

வோட்டர் ஐடிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் பொதுவான ஆவணங்கள்…

*ஆதார் கார்டு

*ரேசன் கார்டு

*கல்வி சான்றிதழ்

*பான் கார்டு

அதாவது பிறந்த தேதிக்கு, இருப்பிட முகவரிக்கு, உங்கள் புகைப்படம் உள்ளடக்கிய ஏதேனும் ஒரு நகல் இருந்தால் விண்ணப்பம் செய்ய முடியும்.

1)முதலில் voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

2)அடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Form 6 ஐ கிளிக் செய்யவும்.

3)பின்னர் NSVP போர்டலில் இடம் பெற்றிருக்கும் புதிய வோட்டர் ஐடி பெறுவதற்கான ஆப்ஷன் இருக்கும். அதை கிளி செய்து உள் நுழையவும்.

4)அடுத்து உங்கள் பகுதிக்கான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதி எதுவென்று பார்த்து கிளிக் செய்யவும்.

5)அடுத்து Form 6 இல் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரத்தையும் பூர்த்தி செய்யவும். தேவையான ஆவண நகலை ஸ்கேன் செய்து அதனுடன் பதிவேற்றவும்.

நீங்கள் படிவத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் விண்ணப்பித்த வோட்டர் ஐடி குறித்த அப்டேட் கொடுக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையமானது உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து வோட்டர் ஐடியை தபால் மூலம் அனுப்பி வைத்துவிடும்.

Previous articleசெல்லாத இரண்டு ரூபாயை பாதுகாக்கும் மம்மூட்டி
Next articleஉங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!