நாம் அனைவரும் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்களித்து இருப்போம். 18 வயதை கடந்த அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வாக்களிக்கும் வயதை அடைந்திருந்தாலும் வாக்காளர் அட்டை இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்காமல் இருந்து இருப்பர். அதுபோல உள்ளவர்களுக்காக தான் வாக்காளர் அடையாள அட்டையை எளிமையான முறையில் விண்ணப்பித்து வீட்டிற்கே வர வைப்பது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
எளிமையாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பது எப்படி
- முதலில் பிளோஸ்ரோருக்கு சென்று Voters Helpline என்னும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு அந்த செயலியில் ஓட்டர்ஸ் ரிஜிஸ்ட்ரேஷன் (Voter Registration) என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் New Voter Registration என்னும் விண்ணப்பம் திறக்கப்படும், அதனை முழுமையாக பிழைகள் ஏதும் இன்றி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இவ்வாறு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு தங்களால் உள்ளிடப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
நாம் இப்பதிவில் மிகவும் எளிமையாக வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து பெறுவது என்று பார்த்துள்ளோம்